உலகின் மோசமான செல்பி இதுதானா? கண்டனத்துக்குள்ளான புகைப்படம்

பள்ளிப் பேருந்து ஒன்றுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவாமல் அவர்கள் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்ட கோர சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

Parmanand (27) மற்றும் 30 வயதுள்ள Gemaram மற்றும் Chandaram ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பள்ளிப் பேருந்து ஒன்றின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் Parmanand சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்ற இருவரும் இரத்தக்காயத்துடன் துடித்துக் கொண்டிருக்க அருகில் நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் நின்றனரே தவிர யாரும் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை.

பொலிஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர்கள் அனைவருமே உயிரிழந்திருந்தனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டும் போட்டோ எடுத்துக் கொண்டும் நின்றவர்கள் யாராவது உதவியிருந்தால் அந்த இளைஞர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான அந்த சமபவம் தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கால இளைஞர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார் ஒருவர் கோபமாக. மனிதாபிமானம் காணாமல் போய்விட்டது என்றார் இன்னொருவர்.