இரட்டைக் குழந்தைகளை கூண்டில் அடைத்து வைத்த பெற்றோர்கள்: காரணத்தைக் கேட்டால் கோபப்படுவீர்கள்

பிரேசிலில் ஒரு வீட்டில் மூன்று வயதுள்ள இரட்டைக் குழந்தைகளை மரக் கூண்டில் அடைத்து வைத்திருந்ததைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

பொலிசார் அந்தப் பெற்றோர்களை விசாரித்தபோது அவர்கள் கூறிய பதிலைக் கேட்டால் கோபம் வராதவர்களுக்குக் கூட கோபம் வரும்.

Aparecidinha என்னும் கிராமத்தில் வசிக்கும் அந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதுமே அப்படித்தான் அடைத்து வைப்பது வழக்கமாம்.

அவர்கள் வேலைக்கு போகும்போது குழந்தைகளை கூண்டிற்குள் வைத்து அடைத்து விட்டு சென்று விடுவார்களாம்.

வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் அந்தக் குழந்தைகள் கூண்டிலுள்ள இடைவெளி வழியாக பரிதாபமாக எட்டிப் பார்க்கும் காட்சியைக் காணலாம்.

குழந்தைகளை துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளுர் அரசு காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.