உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிறப்பான உணவிலும் நீங்கள் ஏலக்காயின் சுவையை ரசித்திருப்பீர்கள். குறிப்பாக, இனிப்பு வகைகளில் பெரும்பாலும் நாம் ஏலக்காய் அவசியமாக சேர்ப்போம்.
அதை உணவில் சேர்ப்பதற்கும் காரணம் இருக்கிறது. ஏலக்காயில் மனிதனுக்கு தேவையான மகத்தான நன்மைகள் உள்ளன. ஏலக்காய் தேநீர் பருகுவதனால் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.
ஏலக்காய் தேநீர்
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி இஞ்சித் தூள்
- 1/2 தேக்கரண்டி ஏலப்பொடி
- 1/8 தேக்கரண்டி மிளகுப்பொடி
- 1 இலவங்கப்பட்டை
- 2 1/2 கப் தண்ணீர்
- 2 தேநீர் பைகள்
- 2 1/2 கப் கொழுப்பு நீக்கிய பால்
- 2 தேக்கரண்டி தேன்
- 2 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பொடி அழகு படுத்த
செய்முறை
1. ஒரு சிறிய பாத்திரத்தில் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, கருப்பு மிளகு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேநீர்ப் பைகளையும், லவங்கப் பட்டையும் அதில் சேர்க்கவும். அதைக் கலக்கி விட்டு சிறு தீயில் வைக்கவும்.
3. தேநீர் நீரில் முழுதும் கரைய ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
4. தேநீர்ப் பைகளையும், லவங்கத்தையும் எடுத்து விடவும்.
5. இத்துடன் பால், தேன் சேர்க்கவும். போதுமான அளவு சூடேறும் வரை அடுப்பில் வைக்கவும். மேலே இருக்கும் நுரை போகாதவாறு மெதுவாகக் கலக்கவும்.
6. கப்பில் தேநீரை ஊற்றி, ஆரஞ்சு தோல் பொடியை அழகாக தூவவும்.
நன்மை
ஜீரணத் தன்மை
ஒரு இந்திய ஆய்வின் படி, ஏலக்காய் சுவைக்காக மட்டுமல்ல, செரிமானத்தை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுத்தலாம். ஏலக்காய் வளர்சிதைமாற்றத்தை தூண்டும். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொடுக்கும்.
இதய ஆரோக்கியம்
அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
புற்றுநோய்
இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.
சிறுநீர் தூண்டல்
ஏலக்காய் சிறுநீர் அதிகரிக்கச் செய்யும். இது அதிகப் பதட்டம் மற்றும் வலிப்பு நோய்களுக்கு சிறந்தது.
நீரிழிவு
ஏலக்காயில் அதிக அளவில் மாங்கனீசு உள்ளது. இது நீரிழிவு அபாயங்களை குறைக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ச்சி இதைப் பற்றி நடத்த வேண்டும்.