மூளைக்கான இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது கழுத்துப் பட்டி!

கழுத்துப் பட்டி அணிவதானது வியாபாரத்தில் ஈடுபடுவது, மேன்மைத்துவத்தைக் காட்டுவது, நீங்கள் வாழ்க்கையில் முன்னோக்கி நகர்வதற்கு அடையாளமாக இருந்தாலும் தற்போதைய ஆய்வுகள் அது மூளைக்கான இரத்த நகர்வை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர்.

அதே நேரம் கழுத்துப்பட்டியை இறுக்குவதால் இரத்தத்தை மண்டையோட்டுப் பகுதியை நோக்கி தள்ளுகிறது. இதனால் அழுக்கம் அதிகரித்து நலமற்ற தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

இதுபற்றி ஆய்வாளர்கள் கூறுகையில் புகைப்பிடிப்பவர்கள், வயதானவர்கள் போன்ற இரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்களில் இதன் தாக்கம் அதிகம் என்கிறார்கள்.

முன்னைய ஆய்வுகள் கழுத்துப்பட்டிகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் குருதியமுக்கம் கண்ணில் பசும்படல நோய்க்கு காரணமாகிறது என்பதை வெளிக்கொணர்ந்திருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது கழுத்துப்பட்டி அணிவது எவ்வாறு பெருமூளைக்குரிய இரத்த ஓட்டத்தை மற்றும் தொண்டைக்குரிய ஓட்டத்தை பாதிக்கிறது என்பது பற்றி ஆராயப்பட்டிருந்தது.

அதற்கென கமுத்துப்பட்டி அணிந்த மற்றும் அணியாத ஒவ்வொரு குழுவிலும் தலா 15 பேர் வீதம் 30 பேர் MRI ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது பெருமூளைக்கான குருதி வழங்கல் 7.5 வீதத்தினால் குறைந்திருந்தது அவதானிக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அணியில் இத்தகைய வீழ்ச்சி அறியப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம் உடலின் மற்றைய பகுதிகளுக்காக இரத்த ஓட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கவில்லை.

மூளைக்காக இரத்த ஓட்டமானது மிக முக்கியம். காரணம் அது மூளைக் கலங்களுக்கு ஒட்சிசன், குளுக்கோஸ் மற்றும் தேவையான போசணைகளை வழங்குகிறது.

இவ் ஓட்டம் தடைப்படும் நேரத்தில் அது தற்காலிக, நிரந்தர பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் இவ் ஆய்வில் ஈடுபட்டிராத நரம்பியல் விஞ்ஞானி Steve Kassem கூறுகையில் இவ் 7.5 வீத இரத்த ஓட்ட வீழ்ச்சியானது உடலில் எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாது என்கிறார்.

மேலும் முன்னரே குருதி ஓட்டத்துடன் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களில் இது அறிகுறிகளை கொண்டுவரலாம் என்கிறார். இது தலைச்சுற்றல், தலை வலி, குமட்டலுக்கு காரணமாகிறது.

இது தொடர்டபான பதிவுகள் Neuroradiology எனும் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.