பிரபல மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டான நவீன் நான் திவ்யலட்சுமியை காதலித்தது மற்றும் திருமணம் செய்து கொண்டது எல்லாம் உண்மை தான் என்று கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நவீன். பிரபலங்களின் பல குரல்களில் பேசும் திறன் கொண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது.
இந்நிலையில் நவீன் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணாகுமாரி என்ற பெண்ணை செய்யவுள்ளதாக கூறப்பட்டதால், அப்போது திவ்யலட்சுமி என்ற பெண் நவீன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்துவிட்டதாகவும், தற்போது தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறி திருமணத்தை நிறுத்தினார்.
அதன் பின் நவீன், கிருஷ்ணாகுமாரியை மதுரையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக திவ்யலட்சுமி கூறினார்.
இந்நிலையில் நவீர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், திவ்யலட்சுமியை நான் காதலித்தது உண்மைதான். திருமணம் செய்துகொண்டதும் உண்மைதான்.
ஆனால், அந்தத் திருமணம் என் விருப்பம் இல்லாமல் நடந்தது, நான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வெறும் கையெழுத்து மட்டும்தான் போட்டிருக்கேன்.
மாலை மாற்றி, தாலி கட்டலை. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு திவ்யா என்னை டார்ச்சர் செய்தார்.
ரவி என்பவரின் வீட்டில் வைத்து கல்யாணம் நடந்ததாக அதைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார்கள், அந்த ரவி யாருன்னே எனக்குத் தெரியாது. பெற்றோர் முன்னிலையில் நடந்த கல்யாணமா இருந்திருந்தால், என் அப்பா அம்மாவோ அல்லது, அவள் அம்மா, அப்பாவோ சாட்சி கையெழுத்து போட்டிருக்கணுமே? ஏன் இல்லை?
நான்தான் திருமணம் செஞ்சுக்க வற்புறுத்தினதா சொல்றாங்க. அப்படின்னா, என் நண்பர்கள்தானே சாட்சி கையெழுத்து போட்டிருப்பாங்க. ஆனால், கையெழுத்து போட்ட ரெண்டுபேருமே திவ்யாவின் நண்பர்கள். இதுக்கு அவங்க என்ன பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.