மீண்டும் மக்களுக்கு அச்சம் தரும் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை வந்தது!

13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வந்தால் அதனை துரதிர்ஷ்ட நாளாக ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர்.

ஏற்கனவே இது போன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை ஒன்றாக சேர்ந்து வந்தது. அந்த வகையில் தற்போது இன்று மீண்டும் 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்துள்ளது. இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தோன்றுகிறது.

இன்றைய கிழமை வெள்ளி மற்றும் தேதி ஏப்ரல் 13 என்பது குறிப்பிடத்தக்கது. பல வெளிநாட்டு ஓட்டல்களில் அறை எண் 12 க்குப் பிறகு 12 ஏ எனவும் அதன் பிறகு 14 எனவும் வரிசையில் இருக்கக்கூடும்

ஏசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு நடந்த போது 13 பேர் கலந்துக் கொண்டனர் எனவும் அன்று வெள்ளி எனவும் சிலர் கூறுகின்றனர்.  அத்துடன் ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவர் அந்த விருந்தின் 13 ஆம் விருந்தாளி எனவும் கூறப்படுகிறது. இதனால் 13 ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை வந்தாலே, அது அபசகுணமாக கருதுகின்றனர்.

13 ஆம் நாள் வெள்ளிக்கிழமையை அபசகுணமாக கருதப்படுவதால், அமெரிக்காவில் வசித்து வரும் முன்னால் விமானப்படை அதிகாரியான பிரிஜ் பூஷண் விஜ் என்பவர் புதிய காலண்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இவரது காலண்டனர் 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய சாதனை புத்தகமான லிம்காவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.