-
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
கன்னி
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கோபம் குறையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.