கணவனை தண்டிப்பதற்காக மனைவி செய்த அதிர்ச்சி செயல்! பரிதாபமாக இறந்த இரண்டு குழந்தைகள்

தமிழகத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். முன்னாள் ஊராட்சி தலைவரான இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் 5 வயதில் மகனும் 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

செந்தில் மற்றும் சிவரஞ்சனிக்கு தம்பதிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தின் போது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு செந்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சினி மகன் அர்சத் மற்றும் 8 மாத குழந்தை ஹர்சிதா இருவரையும் தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி விட்டு, அதன் பின் தன் மீது மண்ணென்ணெய் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு குழந்தைகளை வீசிய தொட்டியிலே இவரும் குதித்துள்ளார்.

உடலில் தீயை பற்றிக் கொண்டு குதித்த போது, சிவரஞ்சனி அலறியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குழந்தைகள் மற்றும் சிவரஞ்சனியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை இறந்தவிட்ட நிலையில் சிவரஞ்சனிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்த கணவன் செந்திலை தண்டிப்பதாக நினைத்து மனைவி சிவரஞ்சனி இப்படி ஒரு துணிகர காரியத்தை செய்துவிட்டதாக உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.