தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்ற இரட்டை நட்சத்திரங்கள் உண்டு. இதில் தற்போது விஜய்க்கு பெரும் இடம் உண்டு. அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் பெருமளவில் கூடியிருக்கிறது.
படங்கள் என்றாலே திருவிழா கொண்டாட்டம் தான். தியேட்டரில் தான் என்றில்லை. தற்போது டிவி சானல்களில் வார வாரம் இறுதி நாட்கள் வந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.
விஜய்யின் சர்க்கார் படத்தை தயாரித்து வருகிறது அந்த சானல் நிறுவனம். கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் நடித்த போக்கிரி படத்தை ஒளிபரப்பினார்கள். இந்த வாரம் அவர்கள் திருப்பாச்சி படத்தை போடுகிறார்களாம்.
பேரரசு இயக்கத்தில் வந்த இப்படத்தில் திரிஷா ஜோடியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் காமெடியனாக நடித்து வெளியாக படம், பாடல்கள், காமெடி என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.