மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை

அஜித் இன்று பலராலும் மனதார புகழப்படும் நல்ல நடிகர். அவரின் பண்புகளை பலரும் பாராட்டுவார்கள். அவருடன் பணியாற்றிவர்கள் பலர் தங்களின் அனுபவங்களை பகிர்வார்கள்.

இதெல்லாவற்றையும் விட அஜித்தை தீவிரமாக நேசிக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர் ஆன் ஸ்கிரீனில் வந்தாலே போதும் என கூறுபவர்களும் உண்டு.

அவரின் படங்களுக்கான எதிர்பார்ப்பு எப்போதும் வேறு லெவலில் இருக்கும். இந்நிலையில் சமூகவலைதளத்தில் அவரின் ஒவ்வொரு விசயங்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர்கள் பில்லா 2 படத்தின் 6 ம் வருட கொண்டாட்டத்தை மேற்கொண்டார்கள். ஆனால் இப்படத்தின் டீசர் முக்கிய சாதனையை செய்தது நினைவிருக்கும் தானே.

டீசர் வெளியான 7 நாட்களுக்குள் 10 லட்சம் பார்வைகளை பெற்ற முதல் தமிழ் படம் டீசர் என்ற சிறப்பை 2012 ல் செய்துவிட்டது.