பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரப்பரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பலரும் இதுபற்றி பேசி விவாதிக்கும் விதமாக சூழ்நிலை மாறிவிட்டது. தமிழில் ஜூன் மாதம் 17 ல் தொடங்கியது.
அதே வேளையில் தெலுங்கில் இந்த சீசன் 2 ஜூன் 10 ம் நாள் தொடங்கியது. பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுதன் நாயுடு என்பவர் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் இவருக்கு மக்களிடையே அமோக ஆதரவு இருந்தது. மேலும் வீட்டிற்குள்ளும் அவருக்கு சூழ்நிலை நன்றாக இருந்தது. தற்போது நிகழ்ச்சிக்குள் நடக்கும் விசயங்கள் பல சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழுவும், அந்த சானலும் சேர்ந்து இவரை மீண்டும் வீட்டிற்குள் கொண்டுவர முடிவெடுத்துள்ளார்களாம். Wild Guard சுற்றில் அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர் மீண்டும் போட்டியாளராக வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.