சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், அதை இயற்கை வழியிலேயே சரிசெய்யலாம். அதற்கு ஒரு அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது. அதை உட்கொண்டு வந்தாலே, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.
ஒருவருக்கு சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், கடுமையான வலியை உணர்வதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதிலும் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.
நாட்டு மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்
- பார்ஸ்லி வேர் – 250 கிராம்
- எலுமிச்சை தோல் – 250 கிராம்
- தேன் – 250 கிராம்
- ஆலிவ் ஆயில் – 200 மிலி
தயாரிக்கும் முறை
பார்ஸ்லி வேரை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் எலுமிச்சை தோல், தேன், பார்ஸ்லி வேர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை
தயாரித்து வைத்துள்ள மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.
குறிப்பு
இந்த மருந்தை தயாரிக்கப் பயன்படுத்தும் தேன் இயற்கையானதாக இருக்க வேண்டும். எலுமிச்சையைப் பயன்படுத்தும் முன், அதை பேக்கிங் சோடா கலந்த நுரல் சிறிது நேரம் ஊற வைத்து, பின் பயன்படுத்த வேண்டும். அதேப்போல் பார்ஸ்லி வேரை நீரில் நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.