முட்டிகளில் உள்ள கருமையான தோல் பகுதியை ஆடையால் மறைத்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க முடியும்.. அதைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
பால், எலுமிச்சை, சர்க்கரை
பால் – 1/4 கப்
எலுமிச்சை – 2
சர்க்கரை – 2 டீஸ்பூன்
முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் அரை பகுதியை சர்க்கரையில் தொட்டு, முட்டிகளின் மீது நன்கு தேய்க்க வேண்டும்.
பிறகு தண்ணீரில் முட்டிகளை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்துவந்தால், முட்டி தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
கற்றாழை
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் தோல் கருமை அடைவதை தடுக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. கற்றாழையை வெட்டி வந்து, அதன் தொலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல் போன்ற பசையை முட்டிப்பகுதியில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்துவந்தால் ஒரு வாரத்தில் தோல் மிருதுவாகும்.