வீட்டிலேயே தயாரிக்கலாம் ’ஹேர் டை’.!

ஒருவரை இளமையாகக் காட்டுவதில் தலைமுடிக்கு எப்போதுமே பங்கு அதிகம். அப்படிப்பட்ட முடி நரை வந்து வெள்ளையாக மாறினால் அதை பலரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அப்போது தலைமுடி கருமையாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் நாடி செல்வது செயற்கை ஹேர் டையை தான்.

இதே ஹேர் டை இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது எப்படி என தெரிந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேற எதுவுமில்லை. இந்த கட்டுரையில் இயற்கை முறையில் கலரிங் சாயத்தை எப்படி தயாரிக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.

மருதாணி: 

மருதாணி போல் இயற்கையாகவே  நிறம் தரும் ஒரு பொருள்  வேறு எதுவுமில்லை. மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும்.  குளித்த பின்பு தலை முடியை செய்ற்கையாக முறையில் உலர்த்த வேண்டும். பின்பு பாருங்கள் பார்லர் சென்று வந்தது போல் இருக்கும்.

செம்பருத்தி: 

செம்பருத்தி இலை தலைக்கு தரும் பயன்கள் ஏராளம். செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை, அவுரி இலை – தலா கைப்பிடி அளவு, வெந்தயம் – 3 தேக்கரண்டி. இவை அனைத்தையும் நன்றாக அரைத்து நரை முடி உள்ள இடத்தில் தடவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு,  தலைக்கு குளிக்க வேண்டும்.

தேயிலைப் பொடி: 

தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி – தலா 3 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதில் வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். பின்பு அதை தலை முடியில் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்தால் எப்போதும் கருமை நிறக் கேசத்தைப் பெறலாம்.