உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களை சில அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்க முடியும்.
முகத்தில் அரிப்போ அல்லது நமைச்சலோ எடுத்தால் – கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
வயிற்றுவலியோ அல்லது வயிற்று போக்கோ இருந்தால் – கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தமாகும்.
கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் – ஜலதோஷம் பிடிக்கப்போகிறது என பொருள்.
காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் – காய்ச்சல் வரபோவதாக அர்த்தமாகும்.
கைமடிப்பு, கழுத்து, மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் – கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது.
கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் – உடலில் அதிக அழுத்தமும், சூடும் உள்ளதாக பொருளாகும்.
தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதி வலித்தால் – அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குவதாக அர்த்தம்.
முழங்கல் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் – உடலில் அதிக எடை கூடிவிட்டது, அதனை குறைக்க வேண்டும் என அர்த்தம்.