முட்டை குழம்பு வைக்காததால் சுட்டு கொன்ற கணவன்: அனாதையான மூன்று குழந்தைகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்புர் எனும் பகுதியில் மனைவி முட்டை குழம்பு செய்து தராததால் ஆத்திரத்தில் கணவன் துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

நவநீத் ஷுக்லா (33) மற்றும் மங்கேஷ் தம்பதியினர் ஷாஜஹான்பூர் அருகில் உள்ள தேவதாஸ் எனும் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

சம்பவ தினத்தின்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணவன் நவநீத் மனைவி மங்கேஷிடம் முட்டை குழம்பு தயாரித்து தருமாறு கூறியிருக்கிறார். அன்று வியாழக்கிழமை என்பதால் மங்கேஷ் முட்டை சமைக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை நடந்த போது வீட்டில் இருந்த பெரியவர்களும் குழந்தைகளும் வெளியே சென்றிருந்தனர்.

ஆத்திரம் முற்றிய நவநீத் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். தனது தகப்பனின் துப்பாக்கியை எடுத்துவந்த நவநீத் முட்டை குழம்பு செய்ய மறுத்த மனைவியை பின்புறம் இருந்து சுட்டதில் மனைவி துடிதுடித்து அந்த இடத்திலேயே பலியானார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தார் ஓடி வந்து பார்க்கையில் மங்கேஷ் இறந்து கிடந்ததை பார்த்து அலறினர். அதன்பின் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மனைவியை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிய நவனீத்தை இன்று போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன மங்கேஸ்கரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12 வருட தாம்பத்யம், மூன்று குழந்தைகளின் தாய் என்கிற முக்கிய உண்மைகளை மது குடித்ததால் மறந்து போன நவநீத் இப்போது சிறையில் இருக்கிறார். குழந்தைகள் அவர்களது தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் விடப்பட்டுள்ளனர்.