இன்றைய ராசிபலன் (15/07/2018)

  • மேஷம்

    மேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: மாலை 5.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 5.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு உண்டு. பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும்-. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். இனிமையான நாள்.

  • துலாம்

    துலாம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: மாலை 5.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். கணுக்கால் வலிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதம் வந்துப் போகும். எதிர்பாராத நன்மை உண்டாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாலை 5.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரி உதவுவார். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மீனம்

    மீனம்:  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனை களை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புதுமை படைக்கும் நாள்.