அவுஸ்திரேலியாவை சேர்ந்த காதலி ஒருவர் புற்றுநோயால் இறந்துபோன தனது காதலனின் விந்தணுவை நீதிமன்றத்தின் உதவியுடன் போராடி வாங்கியுள்ளார்.
Ayla Creswell மற்றும் Joshua Davies ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது விதி இவர்களது வாழ்க்கையில் விளையாடியது.
துரதிஷ்டவசமாக Joshua Davies க்கு புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து அவர் இறந்துபோனார். ஆனால் இவர் இறந்துபோவதற்கு முன்னர் இவரது விந்தணுக்கள் பர்க்கிம்ஹாமில் உள்ள Human Fertilisation and Embryology Authority (HFEA) – யில் சேர்த்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது காதலன் இறந்துவிட்டதால், அவரது விந்தணுவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த காதலி Ayla அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், சான்றுகள் அனைத்தும் காதலிக்கு சாதகமாக இருந்ததையடுத்து விந்தணுவை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.