பிரான்சில் இரயில் நிலையத்தில் பயணிகளை கத்தியை வைத்து மிரட்டி வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரின் பாரிசின் Anvers இரயில் நிலையத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில், நேற்று அங்கிருந்த பயணிகளை நோக்கி இளைஞர் ஒருவர் நான் ஒரு முஸ்லிம் உங்களை எல்லாம் கொல்லப்போகிறேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த பயணிகள் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எகிபது நாட்டைச் சேர்ந்தவரான அந்த இளைஞனின் பெயர் Emad எனவும் 23 வயதிருக்கும் இந்த நபரால் பயணிகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.