தயிரை இரவு நேரத்தில் சாப்பிடலாமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க

தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற மிகவும் பிரபலமான விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.

  • சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும் என்பதால் இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம்.
  • தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.

உங்களுக்கு தயிர் மிகவும் பிடிக்குமானால், அதனை பயமின்றி எந்நேரமும் சாப்பிட ஒருசில டிப்ஸ் தருகிறோம்.

  • தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.
  • மோர் போன்று செய்து குடிக்கலாம்.
  • வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம்.
  • தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம்.