கொடூரமாக தமக்குள் மோதிக் கொண்ட இலங்கை மாணவிகள்…..!!உடன் கைது செய்ய நடவடிக்கை!!

குருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற 6 இளம் யுவதிகள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.தனியார் கல்லூரியில் கல்வி கற்கும் 6 மாணவிகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.18 மற்றும் 21 வயதிற்குட்பட்ட யுவதிகள் விசாரணை ஒன்றிற்காக குருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு இடம்பெற்ற வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ள நிலையில் ஒவ்வொரு யுவதிகள் ஒவ்வொருவரின் தலை முடியை இழுத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பெண்கள் 6 பேரும் பேஸ்புக் ஊடாக நண்பர்களாகிய நிலையில், பேஸ்புக்கில் நம்பத்தகாத ஆண்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை வாய்த்தர்க்கமாக மாறியுள்ள நிலையில், இந்த யுவதிகளை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.