பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து மூன்றாவது ஆளாக நித்யா வெளியேறியிருப்பதாக உறுதிப் படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் ஷோ தொடங்கி எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கிய முதல் வாரம் மமதி சாரியும் அடுத்த வாரம் அனந்த் வைத்தியநாதனும் வெளியேறினார்கள். மூன்றாவது எவிக்‌ஷன் புராசஸில் பொன்னம்பலம், யாஷிகா, தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்களில் மூன்று பேரை மக்கள் தங்களது ஓட்டுகளின் மூலம் காப்பாற்ற, ஒருவர் வெளியேற வேண்டும். இன்று இரவு(15/07/18) மூன்றாவது ஆளாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிற அந்த நபரை கமல் அறிவிக்க உள்ள நிலையில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா ஷோவில் இருந்து வெளியேறி இருப்பதாக சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் தெரிகிறது.

’தாடி’ பாலாஜியுடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நித்யாவும் நுழைந்த போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஷோ தொடங்கிய சில நாட்களில் பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் பரபரப்பானது. ’உங்க பஞ்சாயத்தை வெளிய வச்சுக்கோங்க’ என்கிற சக போட்டியாளர்களின் மைண்ட் வாய்ஸ் அந்த வீட்டுக்கு வெளியேயும் எதிரொலித்தது என்று சொல்லலாம். ’பீப்’ சவுண்டுடன் வெளியான பாலாஜியின் கெட்ட வார்த்தைகளும் விமர்சனங்களைச் சந்தித்தன. ஆனால் கடந்த வாரம் இருவருக்கும் இடையே சண்டைகள் குறைந்தது.

இந்த நிலையில் தான் கணவன் மனைவி இருவரில் நித்யா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. .