கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கைது!!

கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

45 வயதான அவர் டேட்டிங் வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும், இதன் ஊடாக அவர் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஒரு வைத்தியராக செயற்பட்டு, அவரிடம் வரும் பெண்களுக்கு நிதி உதவிகளை செய்து மோசமாக செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பெண்களை தவறாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு துப்பாக்கி முனையில் இரண்டு பெண்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்ட சிறைச்சாலையில் 3 குற்றச்சாட்டின் கீழ் அவர் தண்டனை அனுபவித்துள்ளார்.

சிறைத் தண்டனையின் பின்னர் இந்த வருடம் பெப்ரவரி 14ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டார்.

வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் எனவும், வாரம் ஒரு முறை பொலிஸ் நிலையத்திற்கு வர வேண்டும் எனவும், அனுமதியின்ற இன்றி சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த கூடாதெனவும் அவருக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தது.

அவர் விடுவிக்கப்பட்ட தினத்தில், ஆபத்தான பாலியல் தாக்குதல்தாரி விடுவிக்கப்பட்டுள்ளார், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தனர்.

பின்னர் இரண்டு மாதங்களில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்ட போதிலும் கடந்த புதன்கிழமை மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.