சென்னை: நடிகை ஜெயலட்சுமியை பாலியலுக்கு அழைத்து கைதான வாலிபர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்கிற தகவலை பரப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘‘ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்’’ என்ற பெயரில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இருவரும் அழகான பெண்கள் மற்றும் துணை நடிகைகள், பிரபலமான நடிகைகளின் போட்டோக்களை அனுப்பியும் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புரோக்கர்களான முருகபெருமான், கவியரசன் ஆகியோரது செல்போன்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் பிரபல நடிகைகளின் போட்டோக்களும் அவர்களுக்கு என்ன விலை? என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக தமிழ் திரை உலகின் இளம் முன்னணி நடிகை ஒருவரின் பெயரை இந்த கும்பல் வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பி அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளது.
அதற்கு எதிர் முனையில் பதில் அளித்த வாடிக்கையாளர் ஒருவர் இது ரொம்ப அதிகம். ரூ.1 லட்சம் வேண்டுமானால் தரலாம் என்று கூறியுள்ளார்.
இது போன்று சுமார் 70 பெண்களின் கவர்ச்சி போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் இந்த பெண் பிடித்திருந்தால் பதில் சொல்லுங்கள் என்று மெசேஜ் அனுப்பி ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ரேட்’டை வைத்துள்ளனர்.
இந்த வாட்ஸ்-அப் உரையாடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியது போல பல பெண்களுக்கும் லட்சங்களில் விபசார புரோக்கர்கள் பேரம் பேசியுள்ளனர்.