நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகிரோரையும் குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஸ்ரீரெட்டியின் பதிவிற்கு பதிலளித்த நடிகர் ஸ்ரீகாந்த், அவ்வாறு நடந்திருந்தால் ஏன் 5 ஆண்களுக்கு பிறகு அதனைக் கூற வேண்டும்? தனக்கு நடிகைகளை சிபாரிசு செய்யும் பழக்கம் கிடையாது என தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸும் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
’அது முற்றிலும் உண்மையில்லை. நான் தெலுங்கு படங்களுக்கு பணியாற்றியே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நானி, பவன் கல்யாண் போன்ற மரியாதையான நடிகர்கள் மீது அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்வதாகும்’ என தெரிவித்துள்ளார்.