பிக்பாஸில் பல சண்டை சச்சரவுகள் நிலவி வரும் நிலையில் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதனை பார்க்க ரசிகர்கள் மறப்பதில்லை என்பது தான் உண்மை.
இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரொமோவில் குடும்பத்தினர் அனைவரும் அழுகின்றனர். அதற்கு காரணம் பாலாஜியின் மகளான போஷிக்கா அவரது தந்தையிடம் பல நாட்கள் கழித்து பேசியதே. குழந்தையின் குரலை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்குகின்றனர்.
மேலும் இதில் நித்தியாவை காண்பிக்கவில்லை இதனால் மக்கள் நித்தியாவை வெளியேற்றியிருக்கலாம் அதனால் தான் அவரின் முகத்தை காண்பிக்கவில்லை என்றும் கூறிவருகின்றனர். என்ன நடக்கும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.