பிள்ளை குறித்து தீர்வின்றேல் தற்கொலை செய்வேன்!- யாழில் கதறும் தாய்! (Video)

காணாமலாக்கப்பட்ட எனது பிள்ளை குறித்த உரிய தீர்வை வழங்க மறுத்தால் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என, பிள்ளையை தொலைத்துவிட்டு தனித்து நிற்கும் தாயொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் யாழ். மாவட்ட அமர்வு இன்று (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமர்வில் தொடர்ந்து தெரிவித்த அவர், ”காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாகக் கோரி இன்னும் எத்தனை காலத்திற்கு எம்மை ஏமாற்றப் போகின்றீர்கள். நீங்கள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தராது இங்கிருந்து செல்ல முடியாது.

பல ஆண்டு காலமாக நீங்கள் வருவதும் பேசுவதும் தற்போது வேடிக்கையாகியுள்ளது. எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என இங்கிருந்து செல்லும்போது வாக்குறுதிகளை வழங்கிச் சென்றாலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை.

இனிமேல் அழுவதற்கு கண்களில் கண்ணீரும் இல்லை. எனவே, நீங்கள் எமக்கொரு பதிலை தாருங்கள்” எனத் தெரிவித்தார்.