‘ஜன கன மன’..இந்தியாவை உருகவைத்த தங்கமங்கை வீடியோ உள்ளே!

20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவை சார்ந்த ஹீமா தாஸ் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

51.46 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்த ஹீமாதாஸை ஒட்டுமொத்த இந்தியர்களும் தங்கமகள் என போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

தங்கம் வென்ற ஹீமா இந்திய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது கூட சேர்ந்து பாடுகிறார்.

அவர் பாடும்போது கண்ணில் இருந்து கண்ணீர் வழிய அதை துடைக்கக் கூட தோன்றாமல் தேசிய கீதத்தை பெருமையுடன் நேசித்து பாடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹீமா தங்கம் வென்றவுடன் மூவர்ணக் கொடியை தேடியதும்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது கண்ணில் நீர் வழிய கூட சேர்ந்து பாடுவதும் என்னை வெகுவாக பாதித்தது என தெரிவித்துள்ளார்.

இதேபோல மஹேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹேந்திராவும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.