25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ)

25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள் பூராவும் பேரம் பேசிய கொடுமையினாலோ என்னவோ. ஆளாளுக்குச் சோர்வாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

“காலைலயும் மதியமும் சாப்பிடாம பட்டினி இருந்தா இவ்ளோ சேமிக்கலாம்” என்று தனியாக உட்கார்ந்து ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்தார் டேனி.

(பாவம்!) கேரட், வெங்காயம், முட்டையைத் தொடர்ந்து இன்றைக்கு சர்ச்சைக்கு வித்திட்ட காய்கறி.. ‘எலுமிச்சம் பழம்’. ‘சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி மாதிரி.. “தலைல பொடுகு .. அரிக்குது.. எலுமிச்சம்பழம் வாங்கணும்.. பத்து ரூபா கொடுங்க..” என்று மும்தாஜிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் சென்றாயன். “இன்னிக்கு task முடிஞ்சிடும்.

வெயிட் பண்ணுங்க” என்று முதலில் சமாதானமாகச் சொன்ன மும்தாஜ், பிறகு சென்றாயனின் அலப்பறை அதிகமானவுடன் `தர முடியாது’ என்று வீம்பு பிடித்தார். பணம் சேமித்து தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் அணியும் மகா அல்பத்தனமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

மஹத் சொல்லித்தந்தபடி “நீங்க மட்டும் உங்க பர்சனல் உபயோகத்துக்கு எடுத்துக்கலையா?. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர  மாட்றீங்க?’ நான் எஸ்.ஐ.. நீங்க ஏட்டம்மா..’ என்று மேலும் கடுப்பானார் சென்றாயன்.

(நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்.. பாஸ் பெரிசா.. ஃபெயில் பெரிசா!). நித்யாவும் சென்றாயனுக்கு சப்போர்ட் செய்ய.. விஷயம் மஹத்தின் பஞ்சாயத்துக்கு வந்தது.

‘கொடுத்துடுங்க” என்று துரை உத்தரவு போட்டவுடன் ‘எப்படியாவது ஒழிஞ்சு போங்க’ என்று காசு தர முடிவுக்கு வந்தார் மும்தாஜ். (இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குத்தான் தலையில் தேய்த்துக்கொள்ள ‘எலுமிச்சம் பழம்’ தேவைப்படும் போலிருக்கிறது).

5_08463.png மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 5 08463

முதல் பெஞ்ச் மாணவன் மாதிரி.. ரித்விகா எப்போதுமே உஷாரான முந்திரிக்கொட்டையாக இருக்கிறார். “ரெண்டு போலிஸூம் மைக் மாட்டலை.. இங்கிலீஷ்ல பேசிக்கறாங்க’ என்று பிக்பாஸிடம் போட்டுக் கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல்.. ‘டைனிங் டேபிள்.. ல குப்பையைப் போட்டு வெச்சுடலாம்.. அவங்க சாப்பிட வரும் போது.. ‘க்ளீன் செய்ய பத்து ரூபா வாங்கிடலாம்’ என்று டெரரான ஐடியாவெல்லாம் தந்தார். (நீங்க நல்லா வருவீங்க மேடம்!).

“சேர்ல உக்காந்து சாப்பிட்டா.. காசா.. அப்ப நான் கீழ உக்காந்துக்கறேன்” என்று ரித்விகாவுக்கு பல்பு கொடுத்தார் சென்றாயன். ஆனால் துரைமாரான மஹத் சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு ‘காசு கொடுத்துடு சென்றாயன்.. கொடுக்கக் கொடுக்கத்தான் வரும்’ என்று ‘பந்தா’ செய்து கொண்டிருந்தார்.

பிறகு தாமதமாக விழித்துக்கொண்டு.. “நீங்க வேணுமின்னே.. குப்பை போட்டு காசு சம்பாதிக்கப் பார்க்கறீங்க.. ஐம்பது ரூபா ஃபைன்” என்றார். (இதைக் கண்டுபிடிக்க இவ்ள நேரம்… ஆச்சா.. என்னய்யா போலீஸூ நீங்க?!).

திருடர்களிடமிருந்து தனது கண்ணாடியை மீட்க பாலாஜி செய்த சேட்டை சற்று சிரிக்க வைத்தது. “வயசானவரு… பாவம் ஹெல்ப் பண்ணுங்க” என்று இவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தார் நித்யா.

‘கண்ணாடி வேணுமின்னா.. பத்து ரூபா.. நேத்துலாம் இருபது சொல்லிட்டு இருந்தோம். இன்னிக்கு டிஸ்கவுன்ட்.. பொழச்சுப் போங்க.” என்று கருணை காட்டியது ‘திருடர்கள்’ அணி.

அவர்கள் பத்து ரூபா என்றதை புகார்தாரர்களிடம் வந்து ‘இருபது ரூபா கேட்கறாங்க” என்று மஹத் சொல்லியது அசல் ‘போலீஸ் தனம்’. (இப்பத்தான் கேரக்டாவே மாறத் தொடங்கியிருக்கீங்க).

“ஒண்ணும் தேவையில்லை” என்று கிளம்பிய நித்யா இதற்காக காமிராவின் முன்பு முறையீடு செய்யும் போது ‘காசி’ விக்ரம் மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார் பாலாஜி.

7_08417.png மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 7 08417

பாத்ரூம் அறையில் அமர்ந்திருந்த திருடர்கள் அணி அங்கும் தங்களின் அலப்பறையைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

கழிப்பறை உபயோகிப்பதற்காக வைஷ்ணவி வர, அவர் அறைக்குள் இருக்கும் போது.. ‘இதை எடுத்துக்க.. சைலன்ட்டா எடு.. ஆ.. இப்ப கிளம்பு’ என்று ஏதோவொரு பொருளை திருடுவது போலவே இவர்கள் நாடகம் ஆட.. வந்த காரியத்தை ‘பாதியிலேயே’ விட்டு விட்டு வைஷ்ணவி அலறியடித்துக்கொண்டு வெளியே வர.. திருடர்கள் அணி வெடித்துச் சிரித்தது.

வைஷ்ணவி இதை இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய.. ‘அவங்க திருடங்க… அப்படித்தான் இருப்பாங்க” என்று திருடர்களுக்குச் சாதமாகப் பேசியது போலீஸ். பிறகு இதை திருடர்களிடமும் சென்று ஜாலியாகச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். (தங்களின் இந்த அரிய சேவைக்காக தேசிய விருதே தரலாம்.).

ரித்விகாவிடம் ‘நீங்க அழகாக இருக்கீங்க” என்றது.. ஜனனியின் கையைப் பிடித்து இழுத்தது.. என்பது போன்று பல விவகாரமான புகார்கள் சென்றாயன் மீது வந்தது.. ‘புடிச்சு ஜெயில்ல போடுங்க.. சார்… ‘என்று சந்தானமாக மாறினார் ஷாரிக்.

“இவன் வெளில இருந்தா எனக்கும் பிரச்னை’ என்ற மஹத், சென்றாயனைக் கைது செய்து சிறையில் அடைக்க, அவரோ கம்பி மீது ஏறி நின்று போராட்டம் செய்தார். “அழகா இருக்கீங்க –ன்னு சொன்னது தப்பா?” என்று நியாயம் வேறு. (ஆமாம்.. ரித்விகா தொடர்பாக இத்தனை அபாண்டமான பொய்யைச் சொன்னது தப்புதான் மிஸ்டர் சென்றாயன்).

“மும்தாஜ் எல்லோரையும் பகைச்சுக்கறாங்க.. அப்புறம் எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத் தோணும்?” என்று வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்ட குழு புறம் பேசிக்கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம், டேனியும் சென்றாயனும் தனிமையில் அமர்ந்து தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். ‘பொன்னம்பலத்தின் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாகத்தான் அனந்த் சிறைத்தண்டனை அளித்தார்” என்பது சென்றாயனின் கருத்து. ‘பொன்னம்பலம்.. சுகர் பேஷன்ட் வேற” என்பது அவருடைய அனுதாபம்.

“சில பெரிசுங்க தன் வயசைக் காட்டியே சில அழிச்சாட்டியங்களை பண்ணுவாங்க.. அதை ஒத்துக்க முடியுமா?” என்று ஆவேசமானார் டேனி. “முகமூடி வேற.. சுபாவம் வேற.. பிஸிக்கலா ஹர்ட் பண்ணாதான நான் கோபம் ஆவேன்.. எத்தனையோ குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க.

சபை நாகரிகம்-ன்றது முக்கியமானது. பொன்னம்பலம் பேசுனது தப்பு, ரைட்டுன்னு நான் சொல்ல வரலே.. ஆனால் ‘வயதால் மூத்தவன்’ –ன்னு அவர் சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்’ என்பது டேனியின் கருத்து. (நீ பெரிய மனுஷனா நடந்துக்கலையேடா!…) “நீ கரெக்ட்டா.. பண்ற மச்சான்… மத்தவங்க பிரச்னையை மண்டலை ஏத்திக்காத’ என்று உபதேசம் செய்தார் சென்றாயன்.

9_08094.png மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 9 08094

மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள். (இந்த ‘பேபி.. பேபி.. பாட்டை மாத்துங்களேன். போரடிக்குது!).

இந்த லக்ஸரி டாஸ்க் விளையாட்டில் நிகழ்ந்த பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பிக்பாஸ் இது தொடர்பான அறிவிப்பை அறிவித்தார். ஜனனிதான் ‘நாட்டாமை’யாம். துண்டு அணிவித்து சொம்பெல்லாம் தந்தாலும் கூட ‘நாட்டாமை’ கெட்டப் ஜனனிக்கு வரவில்லை. ஓரமாக நின்று சாட்சி சொல்ல வந்த உதிரி கதாபாத்திரம் மாதிரிதான் இருந்தார். 

“ஐயா.. அடிக்கடி காணாமல் போயிடறாரு” என்று மஹத்தின் மீது முதல் புகாரை வைத்தார் டேனி… (என்னய்யா. டபுள் கேம்.. இது.. இவ்ள நேரம் கூட்டணியாத்தானே இருந்தீங்க?!). தன் மீது சொல்லப்பட்ட அத்தனை புகார்களையும் நேர்மையாக ஒப்புக்கொண்டார் கடமை மீறிய அதிகாரியான மஹத். “பொதுமக்கள் எங்களை மதிக்கறது இல்லை. அந்தக் கோபத்துல கிளம்பிட்டேன். தப்புதான்” என்றார்.

10_08204.png மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! (பிக்பாஸ் சீசன் 2 : 25-ம் நாள் -வீடியோ) 10 08204‘சென்றாயனுக்கு ஏன் மரியாதை தரப்படவில்லை?’ என்று அடுத்த கேள்வி எழுந்தது. “எனக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை” என்று ‘எலுமிச்சம்பழம்’ பிரச்னைக்குப் பழி தீர்த்தார் சென்றாயன். “அவன் ரொம்ப காமெடியா நடந்துக்கிட்டான். அவனால் நெறைய பணமும் செலவாச்சு..” என்று மஹத் விளக்கமளித்தாலும் ‘சென்றாயனை’ எல்லோருமே கேலியாகத்தான் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை.

“திடீர்னு கேம்ல இருக்கறன்றாங்க.. திடீர்னு இல்லைன்றாங்க.. திருடங்க பொருள்களை தூக்கி ஓடிட்டு ‘நாங்க இப்ப கேம்ல இருக்கன்றாங்க” என்று ரம்யா புகார் சொல்ல, ‘இதை ஆரம்பிச்சதே நீங்கதான்’ என்று டேனி விவாதம் புரிந்தார்.

பொதுமக்களில் பெரும்பாலானோர் மஹத்துக்கு ஆதரவு தெரிவிக்க.. தன்னைத்தான் கார்னர் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மும்தாஜ் ‘சரி.. என் பேரைத்தானே சொல்லப் போறீங்க.. சாப்பாட்ல கூட இவங்க பிரச்னை பண்ணாங்களே’ என்று ஆதங்கப்பட்டார்.