உலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

குறித்த போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக இம்முறை (2018) உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் மக்களுடன், பிரான்சில் வாழும் ஈழத்து புலம்பெயர் மக்கள் பிரான்ஸ் அணியின் வெற்றியை தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்திய படி வாகனங்களில் ஊர்வலமாக சென்று கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.