யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விதவிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்தன.இந்த சந்தர்ப்பத்தில் எலும்புக்கூடு போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்கள் வானில் பறந்த போது அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர்.
யாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறித்த பட்டம் விடும் போட்டி நடத்தப்பட்டிருந்தது.சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.