அரசகுடும்பத்து வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் எனது மகள் தின்றாடுகின்றாள் என பிரிட்டிஸ் இளவரசர் ஹரிபின் மனைவி மேகன் மார்க்லேயின் தந்தை தோமஸ் மார்க்லே தெரிவித்துள்ளார்.
எனது மகள் ரோயல் குடும்பத்தின் ஒரு பகுதியாகயிருப்பதன் அழுத்தத்தை தாங்க முடியாமல் திண்றாடுகின்றாள் வேதனைக்கு மத்தியிலும் அவள் சிரிக்கின்றாள் என தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனது மகளின் வேதனையை அவளின் சிரிப்பில் நான் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலாவதியான பழமையான பிரிட்டனின் அரசகுடும்பம் எனது மகள் மீது சுமத்தியுள்ள எதிர்பார்ப்புகளால் அவள் அச்சமடைந்துள்ளால் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
நான் அதனை அவளது கண்களில் சிரிப்பில் முகத்தில் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல வருடங்களாக அவளது சிரிப்பை பார்த்தவன் அவளின் சிரிப்பு குறித்து எனக்கு தெரியும் இது அவளின் சிரிப்பல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் அரச குடும்பத்தில் திருமணம் செய்தமைக்காக பெரும் விலையை செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் அரச குடும்பத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை எனது மகள் விரும்பமாட்டாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் திருமணத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்காக அரச குடும்பம் தன்னை மகளிடமிருந்து பிரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.