அப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. குப்வாரா தொடர்ந்து திடீரென்று இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சில சமயங்களில் ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் குப்வாரா காட்டிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ராஜஸ்தானின் ஜாலாவர் கிரமாத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா பரிதாபமாக பலியானார். அதேபோல் இரண்டு தீவிரவாதிகள் இதில் படுகாயம் அடைந்தனர்.

அவரது உடலுக்கு சொந்த கிராமத்தில் இருந்து சடங்கு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் தான் முகுத் பிகாரி மீனாவிற்கு திருமணமாகியுள்ளது. அவருக்கு தற்போது 5 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. அந்த குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாமல், சவப்பெட்டி மீது, உட்கார்ந்து இருக்கிறாள். பின் தூக்கம் வந்த அவள் அப்படியே பெட்டியின் மீதே படுத்துவிடுகிறாள். இந்த புகைப்படம் இணையம் முழுக்க வெளியாகி மக்களை உறைய செய்துள்ளது.