இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட படங்கள் வைரலாகியுள்ளது.
மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும்போது இந்தி பாடல் இசைக்கப்படுகிறது.
மணமக்கள் பறந்து வந்து மணமேடையில் வந்து அமர்ந்ததை கீழே இருந்த விருந்தினர்கள் பார்த்து வியந்துபோயினர்.