வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி அம்பாள்புரம் பகுதியில் கடந்த மாதம் ஊருக்குள் ஓர் சிறுத்தை புகுந்த வேளையில் சிலரைத் தாக்கியது அச்சத்தின் மூழ்கியிருந்த கிராமத்தவர்கள் சிறுத்தையை தாக்கி கொன்றுவிட்டனர். ஓர் அரிய வகை விலங்கினம் அதனைப் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும். என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது.
அதேநேரம் இவ்வாறான ஆபத்தான வன விலங்கை எந்த அனுமதியும் இன்றி மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் தான் வளர்த்துள்ளனர் என்பது தற்போது மிகவும் தெட்டத்தெளிவாக உறுதியாகின்றது.
அதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்ந சிறித்தை தொடர்பான வைத்திய அறிக்கை தற்போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுத்தை காட்டில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அன்றி கூண்டில் வளர்க்கப்பட்டமைக்கான சான்று உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை மேலும் உறுதி செய்யும் மற்றுமோர் தகவலாக 2015ம் ஆண்டு உதயநகர் மேற்குப் பகுதியில் சிவஞானசுந்தரம் ஆசிரியரின் அயல் கின்ற்றில் ஓர் சிறுத்தைப் குட்டி தவறிவீழ்ந்துள்ளது. அந்த தகவல் இராணுவ முகாமிற்குச் சென்றதும் இராணுவத்தினர் வந்து அந்தச் சிறுத்தை குட்டியை பிடித்துச் சென்ற கண்கண்ட சாட்சிகளும் உள்ளனர்.
எனவே வன விலங்கை துன்புறுத்தியவர்களிற்கு வழக்குத் தாக்கல் செய்த வனஜீவராசிகள் திணைக்களம் அந்த வன உயிரினைத்தை சட்ட விரோதமாக கூட்டில் வைத்திருந்தமைக்காக ஏன் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யவில்லை.
இராணுவம் என்றதும் அச்சமாகவுள்ளதா . சட்டமும் நீதியும் ஒருபக்கத்திற்கு மட்டுமா பொருந்துகின்றது. இதேநேரம் இந்தச் சிறுத்தையை வளர்த்த இராணுவ முகாமில் மேலும் இரண்டு கரடிகளும் உள்ளதாகவும் அவை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிற்கு தெரியாதா என்ற கேள்வியும் எழுகின்றது.
தமிழர் பிரதேசத்தில் குந்தியிருக்கும் இராணுவம் மட்டுமல்ல இராணுவத்தினர் வளர்க்கும் உயிரினங்கள் கூட தமிழர்களிற்கு தொல்லையாகவே உள்ளதனையே இவை எடுத்துக்காட்டுகின்றன. என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.