யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி, இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
யாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சனசமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இப்போட்டி இடம்பெற்றது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பலர், பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.