ஸ்ரீலங்கா கடற்படைக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் மீனவர்கள்!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டன” என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டனர்.

அதற்குள் 37 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன, அதனையடுத்து அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளுக்காக மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதுடன், சான்றுப்பொருள்களும் எடுத்துவரப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதுடன், மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்” என்று கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.