இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் திட்டம் போட்டு மூன்று பேர் செய்த செயலால் தனது இருசக்கர வாகனத்தினை பறிகொடுத்துள்ளார்.
அதிகமாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு வரும் நபரை ஒருவர் அடிக்கிறார். அவரை அடிப்பதற்கு துரத்திக் கொண்டு செல்கிறார் அடிவாங்கியவர்.அவரோ இருசக்கர வாகனத்தில் இன்னொருவருடன் தப்பித்து விடுகிறார். மற்றொரு புறத்தில் நின்று கொண்டிருந்த நபர் அடிவாங்கியவரின் வாகனத்தினை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.
அடியையும் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தினையும் நபர் பறிகொடுத்த காட்சி காணும் அனைவருக்கும் எச்சரிக்கைப் பதிவே ஆகும்.