அடுத்த உலகக்கிண்ண கால்பந்து தொடர் எங்கு நடக்க போகிறது தெரியுமா?

2022ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், கால்பந்தை ரஷ்ய ஜனாதிபதி புடின், கத்தார் நாட்டு லைவர் தமீமிடம் வழங்கினார்.

32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக்கிண்ண தொடரை கத்தார் நடத்த உள்ளது. அதன் பின்னர் உலகக் கிண்ண தொடரில் அணிகளின் பங்கேற்பு 48 அணிகளாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தியதும் அடுத்த உலகக்கோப்பைக்கான பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த அனுபவமும் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார்.