சோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை! புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து கொண்டனர். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் சில சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது என தினம் தினம் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக மஹத் செய்யும் அத்து மீறல்கள் ஏராளம் என புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஏற்கனவே கமல், பொன்னம்பலம் ஆகியோர் மஹத் செய்த அநாகரீக செயல்களை மறைமுகமாக கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர் மாறியது போல தெரியவில்லை என நேற்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சனங்களை கிளப்பி வருகின்றது.

நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற நிலையில் யாஷிகா மற்றும் நித்யா இருந்து வந்தனர்.

இறுதியில் நித்யா போட்டியை விட்டு வெளியேறினார். எப்போதும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்களிடம் விடை பெற்று செல்வார்கள்.

அதே போல நேற்று நித்யா வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.

அந்த சமயத்தில், எப்போதும் போல தனது சித்து விளையாட்டை தொடர்ந்த மஹத், நித்யாவிற்கு ஆறுதல் கூறாமல் ஒரு ஓரத்தில் நடிகை யாஷிகாவை கட்டியணைத்து கொண்டிருந்தார். மற்ற அனைவரும் நித்யா வீட்டை விட்டு வெளியேறுவதை எண்ணி கொஞ்சம் உருக்கத்தில் இருக்க, எப்போதும் போல மஹத் , யாஷிகாவுடன் ரொமான்ஸ் செய்வதில் தான் குறியாக வைத்திருந்தார் எனவும், குறிப்பாக சில வாரங்களாக நடிகர் மஹத், யாஷிகாவிடம் மிகவும் மோசமாக நடந்து வருகிறார் என்றும் பலர் குறை கூறி வருகின்றனர்.

இப்படியிருக்கையில், மஹத் இது போன்ற அநாகரீக செயல்களை நிறுத்தாமல் இருப்பது ரசிகர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

சமூக வலைதளத்தில் அதிகளவில் விமர்சனங்களை பெற்று வரும் புகைப்படம்…