மகளுடன் இருந்த பெண்ணை கற்பழி்த்த காமூகர்களுக்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கற்பழித்து எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ராஜ்புரா பகுதியில் 30 வயது பெண் வீட்டில் மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் 5 பேர் வீட்டுக்குள் புகுந்து அந்த பெண்ணை கற்பழித்தனர். பின்னர் அந்த பெண்ணை அருகில் இருந்த குடிசைக்குள் அடைத்து உயிருடன் எரித்துக்கொன்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் முக்கிய குற்றவாளியான ஆரம்சிங் என்பவரையும், அவரது கூட்டாளி குன்வார் பால் என்பவரையும் கைது செய்தனர். 4 தனிப்படைகள் அமைத்து மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.