பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக மகத்தை தேர்வு செய்த சென்ராயனையே, மகத் இன்று வெளியேற்ற துடித்தார்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று வாரத்தின் தொடக்கம் என்பதால் வீட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைப்பெற்றது.
இதில் வீட்டில் 3 ரோஜா மாலைகள் வைக்கப்பட்டிருந்தது. அதை யார் வேண்டுமானாலும் எடுத்து தங்களுக்கு பிடித்த மூன்று பேருக்கு அணிவிக்கலாம். அந்த வகையில் இந்த முறை பாலாஜி, மகத், ஷாரிக் ஆகியோர் தலைவருக்கான வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகத் தலைவர் :
நீச்சல் குளத்தில் போடப்பட்டிருக்கும் சாவியை எடுத்து, தலைவர் வேட்பாளர்களை பூட்டியிருக்கும் பூட்டுகளை சரியாக திறக்க வேண்டும். அந்த போட்டியில் மகத்திற்கு மாலை போட்ட சென்ராயன் நீச்சல் குளத்தில் முங்கி சரியான சாவியை எடுத்து திறந்து மகத்தை தலைவராக்கினார்.
சென்ராயனை துரத்த நினைக்கும் மகத் :
இந்த வாரம் போட்டியாளர்களை வெளியேற்றும் நாமினேஷன் நடைமுறையில், பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர் ஆகியோர் போட்டியாளர்களாலும், ரம்யா நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வாரமும் வெளியேற்றுவதற்கான வாக்கில் 5 வாக்குகள் பெற்று தாடி பாலாஜி முதலிடத்தில் உள்ளார்.
இதில் மகத் வெளியேற்ற நினைக்கும் போட்டியாளராக சென்ராயனை தேர்வு செய்தார். இன்று மகத்தை தலைவனாக்கிய சென்ராயனையே மகத் வெளியேற்ற தேர்வு செய்தார்.