இல்லற வாழ்க்கையில் யோகமான ராசி???

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி, அவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பார்ப்போம்.


மேஷம்
மேஷம் ராசியில் பிறந்த ஆண்கள் தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். துணையின் மீது அதிக அன்பை செலுத்துவார்கள்.
ஆனால் இவர்களின் இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இல்லையெனில் அதிக சந்தேக குணம் கொண்டவராக திகழ்வார்.
ரிஷபம்
ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத குணம் இருப்பதால், இவர்களின் வாழ்வில் துன்பங்கள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தனது துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு காதல் தோல்வி, திருமண வாழ்க்கை முறிவதும் நிகழ வாய்ப்புள்ளது. இவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக நினைப்பார்கள். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சில நேரங்களில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். தனது துணை மற்றவர்களுடன் பேசுவது அல்லது பழகுவதை விரும்ப மாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும்.
ஆனால் சிம்ம ராசிக்காரர்களிடம் பழகுவது மிகவும் கடினம். ஏனெனில் இவர்கள் தங்களுக்கு பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவார்கள். எனவே கோபத்தை குறைத்தால், வாழ்க்கை சிறக்கும்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். இவர்களின் வாழ்வில் அவர்களுடைய உயிர் தோழன். பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம். கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புள்ளது.
ஆனால் துணைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் தனது துணையை மிகவும் விரும்புவதுடன், தனது துணையை ஒரு காதலியாக நினைத்து சிறப்பாக வாழ்வார்கள். அதனால் தனது துணையை அனைத்து விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அமையும் துணை நல்ல குணம், உழைப்பாளி, மற்றும் அமைதியானவராக இருப்பார்கள். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதல் திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தனக்கான ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்வார்கள். ஆனால் அந்த கொள்கையை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை துணையாகக் கொண்டால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையானது, இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி வாழ்க்கை அமைந்தால், இவர்கள் மறுமணம் செய்து கொண்டு சுகத்துடன் வாழக் கூடியவராக இருப்பார்கள்.