சிஜடி யிடம் கூறியது என்ன? : பதிலளித்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(C. V. Vigneswaran cid statement )

விஜயகலா விவகாரம் தொடர்பில் பொலிஸார் வந்து உங்களைச் சந்தித்தார்களா என முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அவர்,ஆம். திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப்பிரிவு வந்தார்கள். விஜயகலா பேசிய கூட்டத்தில் நானும் பங்கேற்றபடியால் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள்.

அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினார்கள்.
விஜயகலாவின் பேச்சில் இடம்பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றி எனது கருத்தைக் கேட்டார்கள்.

அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்.புலிகள் திரும்பவும் வர வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது இந்தப் பாதுகாப்புச் சூழலையே அன்றி வன் முறைகளை மீண்டும் தொடங்கும் நோக்குடன் அவர் கூறவில்லை.

தனது கட்சிக்கு விசுவாசமாகவே இதுவரை அவர் நடந்து வந்துள்ளார். அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றேன்.அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும் எனவும் தெரிவித்தேன்.