ஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்

பொதுவாக பெண்களுக்கும், ஆண்களுக்கும் பருவ வயதில் முகப்பருக்கள் வருவது இயல்பு தான், அதுவே ஒருசிலருக்கு தழும்பாகிவிடும்.

இதுதவிர வெளிப்புற தூசி, அதிகளவு தண்ணீர் அருந்தாமை, மன அழுத்தம் உட்பட பல காரணிகளும் முகத்தின் வறட்சிக்கு காரணமாகிறது.

இதனால் தோல் வறண்டு போவதுடன், வெடிப்புகளும் தோன்றுகிறது.

இதற்காக பல்வேறு கிரீம்களை வாங்கி தடவினாலும் தற்காலிக மாற்றம் வரலாமே தவிர, சிலருக்கு பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

எனவே வீட்டிலுள்ள தயிர், சந்தனத்தை கொண்டே பொலிவினை பெறலாம்.

தயிரில் உள்ள விட்டமின் டி, கால்சியம், புரோட்டீன்கள் தோலுக்கு சத்துகளை வழங்கி நிறத்தை மேம்படுத்துகிறது, லாக்டிக் அமிலம் இறந்து செல்களை அகற்றுவதுடன் தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கிறது.

இதேபோன்று சந்தனப்பொடியும் தோல் வறட்சியை நீக்குவதுடன் சுருக்கத்தை போக்குகிறது.

பேஸ்பேக் தயாரிக்கும் முறை

ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி, ஒரு டீஸ்பூன் அளவு தயிர், அரை டீஸ்பூன் அளவு தேன் இவற்றை கிறு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பசை போன்று காணப்படும் இந்த ஃபேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும்.

அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரைக்கும் அப்படியே விட்டு வைத்து, சாதாரண நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நீங்கள் இதை உபயோகித்தால், முகம் பொலிவு பெறும், வயதான தோற்றம் நீங்கி அழகுடன் ஜொலிக்கலாம்.