பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 1 மாதத்தை கடந்த நிலையில் 3 பேர் வெளியேறி விட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியானது ஒருபுறம் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாத காட்சிகளை மிட்நைட் மசாலா என்ற தலைப்பில் ஹாட்ஸ்டாரில் ஒளி பரப்பி வருகிறது.
இந்நிலையில், இன்று வெளியாகிய மிட்நைட் மசாலா வீடியோவில், கனாகானும் காலங்கள் என்ற டாஸ்க்கில் பள்ளிக் குழந்தையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் பள்ளி முடிந்தவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார்.
இதைப் பார்த்த பிக்பாஸ் வீட்டு தலைவரான மஹத் யாஷிகாவை பகலில் தூங்கக் கூடாது என எழுப்பவே, இருவருக்கும் இடையில் சிறிய காமெடியான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது, யாஷிகா ஆனந்த் மஹத்தைப் பார்த்து என்னை எழுப்பினால், உன் ஜட்டியை அயன்பாக்ஸை வைத்து கிழித்து விடுவேன், எனக் கூறினார்.
இதுமட்டுமல்லாது, உங்கள் ரூம் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, எங்கள் ரூமைப் பார் எவ்வளவு நீட்டாக இருக்கிறது என்று. என மஹத் கூற, உடனே யாஷிகா நீ பொம்பளை அதான் நீட்டா வச்சிருக்க எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட மஹத், வாய் திறக்காமல் அப்படியே வெளியே சென்றுவிட்டார்.