குழந்தைகள் என்றாலே அழகுதான். ஒரு வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது என்றால் வீட்டில் அனைவரும் குஷியாகி விடுவார்கள்.
அடம் பிடித்தாலும், அழுதாலும் குழந்தை… குழந்தை தானே. ஒரு குழந்தை பிறப்பதை விட அதிக அளவு சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறேதும் இருக்குமா என்ன ? இருக்கிறது.
இன்னொரு குழந்தை!
ஆம். இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?.
10-ல் 4 பேர் இரட்டை குழந்தைகளை பெற்று கொள்வதில் விருப்பம் காட்டுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.எனினும், பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் இப்போது இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவை,சக்கரைவள்ளி கிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில், சக்கரைவல்லி கிழங்கில் சில வகை இயற்கை ரசாயன கலவை இருக்கிறதாம்.முன்பு இதனை வலுவான கர்பப்பைக்கும், மற்றும் பல்வேறு கருவுறும் பிரச்னைக்களுக்கு மருந்தாக கொடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வயது
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருவுறும் போது இரட்டை குழந்தை பெறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும் என தெரிய வந்திருக்கிறது.இந்த வயதுக்கு மேல் உடலில் எஃப்எஸ்எச்-யின் அளவு அதிகமாக இருக்கும். இது பெண்களின் கருப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகளை ஒரே நேரத்தில் தயாரித்து விடும். இதனால் ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் சாத்தியமே.
ஃபோலிக் ஆசிட்
ஃபோலிக் ஆசிட் (follic acid) அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது.ஃபோலிக் ஆசிட் பொதுவாகவே மருத்துவர்களால் கருதரிக்க முயலும் பெண்களுக்கு பரிந்துரைப்பார்கள். 400 மைக்ரோகிராம் கணக்கில் தந்து பின் கருதரித்ததும் 600 மைக்ரோகிராம் ஆக அளவை அதிகரித்து எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.
இது கருவின் சத்துக்காக. இந்நிலை பெரும்பாலும் இரண்டு கருகளை ஊக்குவிக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
கருத்தடை மாத்திரை
கருத்தடை மாத்திரை (contraceptive pills) எடுத்துக்கொள்ளும் பெண்கள் பில்ஸ்ஸை எடுத்துக் கொள்வதை கைவிட்ட உடனே கருவுற முயற்சித்தால் இரு கருகள் உருவாக வாய்பிருக்கிறது.ஏனென்றால், ஒரு 6 மாதங்களுக்கு மருந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருப்பையானது, மருந்தை நிறுத்திய உடனே தடுமாறும். ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளை வெளியிடும். இதனால் இரு குழந்தைகள் சாத்தியமாகும்.
செயற்கை கருவுறும் முறை (IVF)
செயற்கையாக கருதரிக்கும் பெண்களுக்கு தற்செயலாக ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாவதை கேள்விப்பட்டிருப்போம்.இது கருவுற உகந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கருமுட்டைககளை உருவாக்கச்செய்யும் முறை என்பதால் , ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை கருவுற செய்து விடுகிறது.
பின் குறிப்பு: இரட்டையர்கள் தான் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.மருத்துவர்கள் உங்களின் உடல் வாக்கிற்கு ஏற்றார் போல், மருத்துவத்தை, உணவுமுறையை வகுத்து தருவார்கள். இதனால் உங்களுக்கு சரியான விஷயம் பாதுகாப்பாக கிடைக்கும். மன அழுத்தம் இல்லாமல் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.