தெலுங்கில் ஸ்ரீலீக்ஸ் என்ற பட்டியலை வெளியிட்டு பிரபலமாகியுள்ளவர் தான் ஸ்ரீரெட்டி. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றோர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று கூறி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால் பல நடிகர்களின் கண்டன குரலுக்கு ஆளாகியிருந்தார். மேலும் நடிகர் விஷால்தன்னை மிரட்டுவதாக ஃபேஸ்புக்கிலும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘என்னை மன்னித்துவிடுங்கள் விஷால். நடிகைகளுக்கு நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்’ என கூறியுள்ளார்.
இது ஸ்ரீரெட்டிக்கு விஷாலை பார்த்து பயம் வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.