ஆண்களை கொஞ்ச கொஞ்சமாக பெண்களாக மாற்றும் பிளாஸ்டிக் கவர்கள்!….அதிர்ச்சி ரிப்போர்ட்!

உணவுப் பொருட்களை சாப்பிடவும், பரிமாறவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் ஆண்கள் பெண்மை தன்மையுடைவர்களாக மாறும் விபரீதம் உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு கடந்த 16 ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தாள்கள் தடை செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக வாழை இழைகள், பாக்குமட்டை தட்டுக்கள், தாமரை இலைகள், கண்ணாடி, பீங்கான், உலோகத் தட்டு குவளைகள், துணிப்பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரங்களின் பாதுகாப்பு கருதி பேப்பர் கப்புகளும் தடை செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உள்ள, ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களைப் போன்ற வேதியியல் அமைப்பை கொண்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை கடுமையாக பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆண்களுக்கு பெண்களுக்கான தன்மையும், பெண்களுக்கு ஆண்களுக்கான தன்மையும் ஏற்படும் எனவும், ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ள மருத்துவர்கள், நாளடைவில் பல்வேறு வகையிலான புற்றுநோய் ஏற்படும் என்றும், எளிதில் ஜீரணமாகாது என்பதால் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மொத்தத்தில் நீர், நிலம், காற்றுடன் சேர்த்து மனித குலத்திற்கே பெருந்தீங்காய் மாறி நிற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே சுகாதாரத் துறையின் வேண்டுகோளாக உள்ளது.