பிஹார் மாநிலத்தில் ஒராண்டாக காதலித்து பின்னர் திருமணம் செய்ய மறுத்த இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டம் சமஷ்டிபூரில் இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் துர்கேஷ் சரண் (30 வயது).
ஓராண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற அவர் பிரியங்கா குமாரி (வயது 23) என்ற பெண்ணை தற்செயலாக சந்தித்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒராண்டாக இருவரும் காதலித்துள்ளனர். மொபைல் போனில் பேசியும் வந்துள்ளனர்.
சமீபகாலமாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு. சரணை வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் மொபைல் போனில் பேசியபோது, பிரியங்கா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற விவரம் சரணுக்கு தெரிய வந்தது. இதையடுத்து தனது பிரியங்காவை சந்திப்பதை இளைஞர் தவிர்த்து வந்துள்ளார். மேலும் சரணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன.
இதையடுத்து ஆத்திரமடைந்த பிரியங்கா தனது உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர் பெண் வீட்டார் ஆலோசனை செய்து அந்த சரணை கடத்தி வந்து, தங்கள் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் சரண், பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேறு ஒரு வாகனத்தில் வந்த பிரியங்காவின் வீட்டினர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டினர். பின்னர் வாகனத்தில் ஏற்றி அந்த சரணை கடத்திச் சென்று வீடு ஒன்றில் அடைத்து வைத்தனர்.
அதற்குள் நடந்த விவரம் சரணின் பெற்றோருக்கு தெரிய வரவே, போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த சரணை மீட்டனர். மேலும் புகாரின் பேரில் பிரியங்காவின் உறவினர்கள் 5 பேரை ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.